

நம் நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக இன்று காலை கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக மேட்டுப்பாளையத்தில் உள்ள மினி கோயம்பேடு என்று அழைக்கப்படும் காய்கறி சந்தையில் வியாபாரம் செய்யும் மண்டி உரிமையாளர்கள் , வியாபாரிகள் , விவசாயிகள் , சுமைதூக்கும் தொழிலாளர்கள் , வாகன ஓட்டுநர்கள் என அனைவருக்கும் மற்றும் அவர்கள் குடும்பத்தாருக்கும் ஹோமியோபதி ஆர்சனிக் ஆல்பம் 30 எனும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் சுமார் 1,000 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
ஊட்டியில் முழு அடைப்பு காலத்தில் சேவை புரிந்து கொண்டிருந்த தன்னார்வலர்கள் சுமார் 60 பேருக்கு , வன அதிகாரிகள் சுமார் 40 பேருக்கு ஹோமியோபதி நோய் எதிர்ப்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
இம் முகாமிற்கு உறுதுணையாக இருந்த ஹோமியோபதி மருத்துவர் திருமதி Helen Angeline அவர்களுக்கு நன்றி.
நம்முடன் இணைந்து நம்ம மேட்டுப்பாளையம் குழுவினரும் மற்றும் மேட்டுப்பாளையம் வெஜிடபுள் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பினரும் உடன் இருந்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை மருத்துவர் திரு. சேரலாதன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
