அனைவருக்கும் வணக்கம் ,
நமது நண்பர்கள் அறக்கட்டளை தன்னார்வலர் திரு. Arjun Narayanan வாயிலாக சென்னையிலுள்ள 16 பார்வையற்றோர் குடும்பம் உள்ளதாக (30 பேருக்கு மேல்) தெரியவந்தது .. இதில் நான்கு குடும்பங்களுக்காக நமது தன்னார்வலர் திரு அர்ஜுன் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி கட்டடத்தில் வீடு பெற்றுத்தர போராடிக் கொண்டிருக்கிறார்..இவர்கள் தனியார் நிறுவனம் மற்றும் தொண்டு நிறுவனமும் இணைந்து நடத்தும் கொரியர் கவர் ஒட்டும் பணியில் கடந்த 3 ஆண்டுகளாக பார்வையற்றோர் வேலை செய்து வருகின்றனர்.ஒரு வேளை உணவும் மற்றும் ஒரு நாளைக்கு நூறு ரூபாய் என்ற வீதமும் இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.திடீரென்று அந்நிறுவனம் ஆர்டர்கள் இல்லை.ஆடர் வந்தவுடன் உங்களை அழைக்கிறோம் என்று இவர்களை வேலையை விட்டு நிறுத்திவிட்டார்கள்.இதை அர்ஜுன் நம்மிடம் தெரிவித்தவுடன் நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக 16 குடும்பங்களுக்கு தலா 25 கிலோ அரிசி மூட்டை வழங்கப்பட்டது.
இப்பெரும் பொறுப்பை ஏற்று நடத்தி கொடுத்த திரு.அர்ஜுன் அவர்களுக்கும்,அவர்களது தந்தைக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 
 

Leave a Reply

Explore More

Educational Help

We fct Has Paid Fee For Single Parent Student.  

Food Help During Covid Time

Today we fct have given 120+ Food packets along with water bottles at Coimbatore ESI for patient’s attenders and roadside people through National Anti crime and Human Rights Council of

Educational Help

We Fct have given 7,000/- cheque for single parent student.